சிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்

233 0

சிவ­னொ­ளி­பா­தமலை பரு­வ ­கால யாத்­தி­ரை­யா­னது இம்­முறை  நாளை 11ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யன்று உந்­துவப் பூரண தினத்­தன்று ஆரம்­ப­மா­கி­றது.

இதனை முன்­னிட்டு சிவ­னொ­ளி­பா­த­மலை அடி­வா­ர­மான நல்­ல­தண்ணீர் நக­ரி­லி­ருந்து மலை உச்சி வரை­யி­லான பாதைகள் சுத்­தப்­ப­டுத்தல், படிகள் சீர்­தி­ருத்தல், மின் இணைப்பு, மின் குமிழ் இணைத்தல் போன்ற பணிகள் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

நல்­ல­தண்ணீர் நக­ரத்தில் பொலிஸ் நிலையம் மற்றும் மேல­தி­க­மாக சீத்­தக்குல, ஊசி­மலை, மலை­யுச்சி ஆகிய இடங்­களில் தற்­கா­லிக பொலிஸ் நிலை­யங்கள் அமைத்தல் பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. மேலும் புகை­யி­ரத மார்க்­க­மாக வருகை தரும் யாத்­தி­ரி­கர்கள் நலன் ­க­ருதி அட்டன் புகை­யி­ரத நிலை­யத்­தி­லி­ருந்து நல்­ல ­தண்ணீர் நகரம் வரை விசேட பஸ் சேவை மேற்­கொள்­ளப்­ப­டு­வதன் மூலம் புகை­யி­ரத, பஸ் தொடர் பய­ணச்­சேவை துரி­த­மாக்­கப்­ப­ட­வுள்­ளது. நேற்று  அதி­காலை முதல் இன்று வரை சமன்­தேவ உரு­வச்­சிலை தேவ ஆப­ரண, உப­க­ர­ணங்கள், பெல்­ம­து­ளையின் சிவ­னொ­ளி­பா­த ­ம­லையில் கல்­பொத்­தா­வெல ரஜ­மகா விகா­ரையில் அடி­யார்­களின் பூஜை, வழி­பா­டு­க­ளுக்­காக வைக்­கப்­படும். தொடர்ந்து இன்­று­தேவ உரு­வச்­சிலை, ஆப­ர­ணங்கள், உப­க­ர­ணங்கள் என்­பன ஊர்­வ­ல­மாக எடுத்துச் செல்­லப்­படும்.

பெல்­மதுல்லை, இரத்­தி­ன­புரி, குரு­விட்ட, எக­லி­ய­கொடை, அவி­சா­வளை, தெஹி­யோ­விட்ட, கர­வ­னல்ல, எட்­டி­யாந்­தோட்டை, அம்பகமுவ, அட்டன், மஸ்கெலியா, நல்லதண்ணீர் ஆகிய நகரங்களை ஊடறுத்து புறப்பட்டு வரும் ஊர்வலம் நாளை உந்து வப் பூரண தினமன்று மலை உச்சியை அடைந்ததும் ஊர்வலம் நிறைவுறும்.