வவுனியாவில் சிங்கள ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்(காணொளி)

310 0

k800_sequence-02-still054வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிங்கள பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு அரசியல் செல்வாக்கின் மூலம் இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியா தெற்கு வலய கல்வி திணைக்களகத்திற்கு முன்னால் பாடசாலை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒருமாத காலத்திற்குள்ளாகவே இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல் தலையிடு காரணமாகவே இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வவுனியா தேசியக் கல்வியல் கல்லூரியில் சிங்கள மாணவர்களின் புதிய கற்கை நெறியினை உடனடியாக ஆரம்பிக்கவும், சிங்கள மாணவர்களின் ஆரம்ப கல்வி செயற்பாடுகள் வேற்றுத்தாயின் பிள்ளைகள் போல் பாராமுகமாக இருப்பது ஏன், கல்வி அமைச்சர் அவர்களே புதிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியது ஏன்? புதிதாக வரும் ஆசிரியர்களுக்கு அரசியல் மூலம் இடமாற்றம் வழங்கியது யார்? போன்ற பதாதைகளை தாங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வவுனியா தெற்கு சிங்கள வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.வீரசிங்க தலைமையில் வலயக்கல்வி திணைக்களத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், குறிப்பிட்ட சிங்கள பாடசாலைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்கள் என்றும் 100 ஆசிரியர் நியமனங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதால் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை றிறைவேற்றப்படும் எனவும் பணிப்பாளர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.