இராணுவத்தால் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் !

351 0

கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று (08.12) இடம்பெற்றது.

கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை  5மணியளவில் சேமமடு முதலாம் யூனிற் மற்றும் 2யூனிற் பகுதிகளிற்கு சென்ற இலங்கை இராணுவத்தினர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 28 சாதாரண பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்து வாகனங்களில் ஏற்றிசெல்லப்பட்டு காணாமலாக்கபட்டிருந்தனர். அவர்களின் 35வது நினைவுதினமே அன்னுஷ்டிக்கப்பட்டது.

சேமமடு பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சேமமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தார்கள், உறவினர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.