ரயில்வே போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பம்!

303 0

ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

 

மூன்று கட்டங்களாக இத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் 20 ரயில்களுக்கு இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரயில் போக்குவரத்தில் நிகழும் காலதாமதங்களை இத்தொழில்நுட்பம் மூலம் விரிவாக அறிவிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ரயில்வே திணைக்களமும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.