சிறு ஏற்றுமதி பயிர்களின் மீள் ஏற்றுமதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் மீள் ஏற்றுமதிக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கும் நேற்றைய தினம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கழிவு பொருள் மீள் ஏற்றுமதி, வெசாக் விளக்குகள் மற்றும் பட்டம் என்பனவற்றின் இறக்குமதிக்கும் உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

