வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிக்க தீர்மானம்!

292 0

உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத்துணிக்கான வவுச்சர் எதிர்வரும் பாடசாலை தவணை ஆரம்பத்தில் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந் நிலையில் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

உயர் தர மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களுக்காக செலுத்தப்படும் நிவாரணம் போதுமானது அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர்களுடனான சந்திப்பபின் போது அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறினார்.