ஆர்.பீ.கே பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பகுதியில் உள்ள 10 தோட்டங்களை சேர்ந்த 231 உத்தியோகஸ்தர்கள் கடந்த 8 தினங்களாக பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று 9 வது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.
எது எவ்வாராயினும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர், மேலும் இப்பகுதியில் உள்ள 8 தேயிலை தொழிற்சாலைகளிலிருந்தும் தேயிலை தூள் பொதி செய்யப்பட்டு விற்பனைக்காக நேற்று கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகின்றது.
தோட்ட சேவையாளர்கள் தேயிலை பொதிகளை கொண்டு செல்வதை தடுக்க முற்பட்ட போதும் அது பலன் இல்லாது போய்விட்டதாக தெரிவித்துள்ளனர்,
மேலும் இன்று கொழும்பு தலைமை காரியாலயம் முன்பாக மஸ்கெலியா தலவாக்கலை, பதுளை,கேகலை போன்ற தோட்டங்களை உள்ள்டக்கி 800க்கு மேற்பட்ட தோட்ட சேவையாளர்கள் மேற்கொள்ள இருந்த போராட்டத்தை முன்கூட்டியே கம்பனிகாரர்கள் தடுத்துள்ளதாகவும் பேச்சுவார்தைக்காக தலைநகரில் உள்ள காரியாலயத்திற்கு அழைத்துள்ளதாகவும் இன்று பேச்சு வார்த்தை இடம்பெற உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
25 சதவீத வேதனத்தை அடிப்படை சம்பளத்தில் இணைத்து தருமாறு கோரியே இந்த போராட்டம் 9 வது நாளாகவும் மஸ்கெலியா, தலவாக்கலை, நமுனுகல, கேகலை போன்ற இடங்களில் அகிம்சை வழியில் இடம்பெற்று வருகின்றது.

