ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 187 மோட்டார் சைக்கிள்களை நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பரிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள பொலிஸ் காலாட்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

