ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூறி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களையே கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்தனர்.
அதில் நான்குபேரை விசாரணைகளின் பின் விடுவித்துள்ளதோடு , பிரதான சந்தேக நபரான வாழைச்சேனையை சேர்ந்த நபரிடன் பொலிஸார் 72 மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வந்துனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

