புலமைப் பரி­சில்­க­ளுக்­காக பெருந்­தோட்ட மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்பம் கோரல்

49 0

இலங்கை பெருந்­தோட்ட தொழி­லாளர் கல்வி நம்­பிக்கை நிதி­யத்­தினால் (CEWET) வழங்­கப்­படும் புலமைப் பரி­சில்­க­ளுக்­காக   பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களது பிள்­ளை­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.  இந்தப் புலமைப் பரி­சில்கள் க.பொ.த. உயர்­தரம், பட்­டப்­ப­டிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்­கையின் ஏதேனும் அர­சாங்க தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­களில் தொழில்/தொழில்­நுட்பக் கல்­வியை மேற்­கொள்ளும் மாண­வர்­க­ளுக்­கா­ன­வை­யாகும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இச்­செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கை­யில் ­மேலும் குறிப்­ப­ிடப்­பட்­டுள்­ள­தா­வது,

க.பொ.த. சாதா­ரண தரத்தில் (குறைந்­தது 6 திறமைச் சித்­தி­க­ளுடன்) சித்­தி­ய­டைந்த  அல்­லது உயர் தரத்தில் சித்­தி­ய­டைந்த 25 வய­திற்கு குறைந்­த­வர்கள் இந்தப் புலமைப் பரி­சில்­க­ளுக்கு விண்­ணப்­பிப்­ப­தற்குத் தகு­தி­யா­ன­வர்கள். பூர்த்தி செய்­யப்­பட்ட விண்­ணப்­பங்கள் பிறப்புச் சான்­றிதழ், க.பொ.த. சாதா­ரண தரம் அல்­லது உயர் தரப்­ப­ரீட்சைப் பெறு­பேறுகள், பெற்­றோர்­க­ளது சமீ­பத்­தைய சம்­ப­ளத்தாள் விபரம் மற்றும் பெற்­றோ­ரது வேலை தொடர்­பாக தோட்ட அத்­தி­யட்­ச­க­ரி­னது அத்­தாட்சி என்­ப­வற்றின் நிகழற் பிர­தி­க­ளுடன் இணைந்­த­தாக அனுப்பி வைக்­கப்­ப­டுதல் வேண்டும்.

விண்­ணப்பப் படி­வங்கள்  இந்­திய உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் www.hcicolombo.gov.in எனும் இணை­யத்­தள முக­வ­ரி­யி­லி­ருந்து பதி­வி­றக்கம் செய்து கொள்ள முடியும்.

அல்­லது விண்­ணப்பப் படி­வங்­களை இந்­திய உயர் ஸ்தானி­க­ரா­லயம், 36-38, காலி வீதி, கொழும்பு 3 மற்றும் இந்­திய பிரதி உயர்ஸ்தானி­க­ரா­லயம், இல. 31,  ரஜ­பி­கில்ல மாவத்தை,  கண்டி ஆகிய இடங்­க­ளி­லி­ருந்தும் பெற்­றுக்­கொள்ள முடியும்.

முறை­யாகப் பூர்த்தி செய்­யப்­பட்ட படி­வங்கள் செய­லாளர், CEWET மே/பா, இந்திய உயர் ஸ்தானி கராலயம், த.பெ.எண். 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு  எதிர்வரும் 27ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு  முன்னதாகவோ கிடைக்கும் வகை யில் அனுப்பப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.