அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தாமதம் : அமைச்சர் அன்பழகன் விளக்கம் !

390 0

தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக் கீடுக்கு மத்திய அரசு உத்திர வாதம் அளித்தவுடன் அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்துக் கான ஒப்புதல் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத் தின் 40-வது பட்டமளிப்பு விழா அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் துணைவேந்தர் சுரப்பா பேசும்போது, ‘‘அண்ணா பல் கலைக்கழகத்துக்கு உயர்கல்வி நிறுவன சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. மாநில அரசு தாமதிக்காமல் விரை வாக ஒப்புதல் வழங்க வேண் டும்’’என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மேடையில் இருந்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழ கனிடம் இதுதொடர்பான விவரங் களை கேட்டறிந்தார்.

69 சதவீத இடஒதுக்கீடு

பட்டமளிப்பு விழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் அன் பழகனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, “அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், ஏற் கெனவே அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடில் எந்தப் பிரச் சினையும் வராது என்ற உறுதியை மத்திய அரசு அளித்தவுடன், மாநில அரசு உடனே ஒப்புதலை வழங்கிவிடும்’’ என்றார்.