வான் பாயும் நிலையை அடைந்துள்ள யான் ஓயா நீர்த்தேக்கம்

349 0

யான் ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யான் ஓயா நீரத் தேக்கத்தின் நீர் மட்டம் நேற்று (02) 35.9 மீற்றராக காணப்பட்டதாக நீர்த்தேக்க திட்ட பணிப்பாளர் பொறியியலாளர் என்.உதய ஹேமகுமார தெரிவித்தார்.

அதன்படி, அதன் முழு நீர் மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 36 மீற்றர்களாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக வான் பாய்வதற்கு இன்னும் 0.1 மீற்றர் மாத்திரமே உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை வேளையில் பெய்த கடும் மழையுடன் நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் வான் கதவு ஒன்று திறக்கப்படவுள்ளதாக நீர்த்தேக்க திட்ட பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.