சுகாதாரத் துறையில் 5,224 பேர் நியமனம்- நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்

50 0

தமிழக சுகாதாரத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக சுகாதாரத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட  2721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட மொத்தம் 5224 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, புதிதாக நியமிக்கப்பட்டவர்களுள் பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக முதலமைச்சர் பழனிசாமி 10 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.
இதையடுத்து, தமிழ்நாடு தொலைதூர கண்ணியல் வலைதளம் மற்றும் 32 கண் பரிசோதனை மையங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய நான்கு இடங்களில், அரசின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.