இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதே மாவீரர் தின எழுச்சி சொல்லும் செய்தி – துரை­ரா­ச­சிங்கம்

301 0

ஜனா­தி­பதித் தேர்­தலின் போது செய்­தி­யொன்­றினைத் தெரி­வித்­தது போன்றே தமிழ் மக்கள் மாவீரர் தினத்­திலும் ஜனா­தி­ப­திக்குச் செய்­தி­யொன்றைத் தெரி­வித்­துள்­ளார்கள். வெறு­மனே பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யினால் மாத்­திரம் தமிழ் மக்­களின் அபி­லா­சைகள் திருப்தி செய்­யப்­பட முடி­யா­தவை, வடக்­கு–கிழக்கு மக்­களின் முத­லா­வது தெரிவு இனப்­பி­ரச்­ச­ினைக்­கான தீர்வு என்­பதன் வெளிப்­பாடே மாவீரர் தினத்தில் மக்­களின் எழுச்சி ஜனா­தி­ப­திக்கு சொல்லும் மற்­று­மொரு செய்தி என இலங்கைத் தமிழ் அரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் கி.துரை­ரா­ச­சிங்கம் தெரி­வித்­துள்ளார்.

மாவீரர் தின அனுஷ்­டிப்பின் போது மக்­களின் உணர்­வு­பூர்­வ­மான பங்­கு­பற்­றுதல் தொடர்பில் கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ் மக்­களை சம உரி­மை­யுள்ள பிர­ஜை­க­ளாக ஏற்­றுக்­கொள்ளும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி பிர­க­ட­னப்­ப­டுத்­து­வதே சுபிட்­ச­மான இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்கு உரிய ஒரே நேரிய வழி.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தமது பதவிப் பிர­மா­னத்தை அநு­ரா­த­பு­ரத்தில் மேற்­கொண்டார். இங்கு தான் தமிழ் மன்னன் எல்லா­ளனை வெற்றி கொண்ட சிங்­கள மன்னன் துட்­ட­கை­மு­னுவின் நினை­விடம் அமைந்­துள்­ளது.

இந்தப் பத­வி­யேற்பு ஓசை­ப­டா­ம­லேயே சிங்­கள, பௌத்த மேலா­திக்­கத்தை பிர­க­ட­னப்­ப­டுத்தும் ஒன்­றா­கவே திட்­ட­மி­டப்­பட்டு அரங்­கேற்­றப்­பட்­டது. ஜனா­தி­பதி தான் சிங்­கள பௌத்­தர்­க­ளா­லேயே தெரிவு செய்­யப்­பட்­ட­தா­கவும் அங்கு பிர­க­ட­னப்­ப­டுத்­தினார். இவ்­வாறு அவர் பிர­க­டனப் படுத்­து­வ­தற்கு கார­ணமாய் அமைந்த விடயம் வடக்கு–கிழக்கில் அவர் பெற்ற அதி­கு­றைந்த வாக்­கு­களே. இதைத் தொடர்ந்து இரா­ணுவ அதி­கா­ரிகள் பலர் முக்­கிய பத­வி­களில் அமர்த்­தப்­பட்­டனர். பாது­காப்பை வலுப்­ப­டுத்தக் குறிப்­பாக வடக்கு–கிழக்கு மாவட்­டங்­க­ளுக்கு இரா­ணு­வத்­தி­னரை அனுப்பும் திட்டம் அரசாங்கத்தால் வெளி­யி­டப்­பட்­டது. இவ்­வி­டத்தில் தமிழ் வேட்­பாளர் போட்­டி­யிட்­டது மற்றும் வாக்­க­ளிப்பைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மாறும், சிங்­களத் தலை­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கா­தி­ருக்­கு­மாறும், விரும்­பி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கு­மாறும் சொன்ன விட­யங்கள் என்­பன இல்­லா­தி­ருந்தால் இன்னும் குறைந்த வாக்­கு­களை மொட்­டுக்கு வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய நிலை­மையை ஏற்­ப­டுத்தி வடக்கு–கிழக்குத் தமிழர் தொடர்பில் இன்னும் அதிக அக்­க­றையைச் செலுத்த வேண்டும் என்ற செய்­தியை ஜனா­தி­பதி அவர்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருக்­கலாம் என்னும் விட­யத்தை சம்­மந்­தப்­பட்­ட­வர்கள் உளங்­கொள்­வதும் பொருத்­த­மா­னது.

மாவீரர் நாள் கடந்த வரு­டங்­களில் அனுஷ்டிக்­கப்­பட்­டதைப் போல் அனுஷ்டிக்­கப்­பட முடி­யாது என்ற ஊகங்கள் வெளி­யி­டப்­பட்­டன. யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாவீரர் நாளுக்கு முற்­றாக தடை கூட விதிக்­கப்­பட்­டது. இந்தப் பின்­ன­ணி­க­ளிலே மாவீரர் நாள் வடக்கு–கிழக்கு எங்­கனும் முன்­னெப்­போதும் இல்­லாத வகை­யிலே அதி­க­ள­வான மக்­களின் பங்­கு­பற்­று­த­லோடு உணர்­வு­பூர்­வ­மாக நடை­பெற்று முடிந்­துள்­ளது.

எனவே ஜனா­தி­பதி இந்த நடப்­பி­யலை மனம்­கொண்டு அர­சி­யற்­தீர்­வுக்கு முதன்­மை­ய­ளிக்கும் அதே­வே­ளையில் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளிலும் தொடர்ச்­சி­யாக புறக்­க­ணிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்கள் என்ற வகை­யிலே வடக்கு–கிழக்கின் அபி­வி­ருத்தி தொடர்பில் அதிக அக்­கறை செலுத்த வேண்டும் என்ற செய்­தியே இவற்றின் வெளிப்­பா­டாகும்.

இலங்கை சுதந்­திரம் அடைந்த நாள் தொட்டு தமிழ் மக்கள் தொடர்ச்­சி­யாக வெளி­யிட்டு வரும் தமது இறைமை சார்ந்த இவ்­வி­ட­யத்தின் இயற்கை நீதித் தன்­மை­யினை ஜனா­தி­பதியும் அவரின் ஆலோ­ச­கர்­களும் உள்­வாங்கிக் கொள்­வார்கள் என்று நம்­பு­கின்றோம்.

எனவே தமிழ் மக்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும் தற்போதைய பாராளுமன்றம் உருவாக்கி வைத்துள்ள அரசியலமைப்பை முழுமையாக்கி நிறைவேற்றி பிரகடனப்படுத்தும் செயற்பாட்டில் புதிய அரசாங்கத்தை ஜனாதிபதி வழிநடத்துவது அவர் எதிர்பார்க்கும் சுபிட்சமான இலங்கையை உருவாக்குவதற்கான இலகுவானதும், நேரியதானதுமான பாதையுமாய் அமையும் என்றும் தெரிவித்தார்.