தாய்லாந்தில் செத்துப்போன மான் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்

324 0

தாய்லாந்தில் செத்துப்போன மான் வயிற்றில் சுமார் 7 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் மானின் உணவுக்குழாயை அடைத்து, அதனால் மான் இறந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள நாநோய் மாவட்டத்தில் குன் சதான் தேசிய பூங்கா உள்ளது. இங்கு கடந்த 25-ந்தேதி பூங்கா அதிகாரி ஒருவர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 10 வயதான காட்டு மான் செத்து கிடந்ததை கண்டார். இதையடுத்து, அந்த மானின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனை செய்தனர். அந்த மானின் வயிற்றில் இருந்து சுமார் 7 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:-

மானின் வயிற்றில் பிளாஸ்டி பைகள், காபி கவர்கள், ஆண்களின் உள்ளாடை மற்றும் பிளாஸ்டிக் கயிறுகள், ரப்பர் கையுறைகள் ஆகியவை இருந்தன. இந்த மான் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக்கை தின்று வந்திருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்த பிளாஸ்டிக் பொருட்கள் மானின் உணவுக்குழாயை அடைத்து, அதனால் மான் செத்திருக்கும் என கருதுகிறோம். எனினும் இதுபற்றி விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.