இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவரா என கேள்வி எழுப்பியவேளை இதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை என நியுஸ் 18 தெரிவித்துள்ளது.
எனினும் இது பிரதமரை பொறுத்தவிடயம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் இந்திய இலங்கை உறவுகள் ஒரு விவகாரத்தை விட பெரியவை எனவும் தெரிவித்தன என நியுஸ் 18 தெரிவித்துள்ளது.
பிராந்திய விவகாரங்களும் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறலாம் என நியுஸ்18 தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமரிற்கும் இடையிலான இன்றைய சந்திப்பின்போது இலங்கையில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்களை தொடர்வது, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு ஆகிய இரு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படலாம் என நியுஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்வதை உறுதி செய்வதில் இந்திய பிரதமர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார் என புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன என நியுஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தலைவர்களும் இன்று ஆராயவுள்ள விடயங்களில் இலங்கையில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்களை தொடர்வது முக்கியமானதாக காணப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன என செய்தி வெளியிட்டுள்ள நியுஸ் 18 வீடமைப்புதிட்டங்கள்,எண்ணெய் குதங்கள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் புகையிரத பாதைகள் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே இந்தியா தொடர்ந்தும் ஆர்வம் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலையில் மூலோபாய ரீpதியில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவும் இலங்கையும் 2015 இல் இணக்கப்பாட்டிற்கு வந்தன.
இந்த அபிவிருத்தி திட்டங்களில் அனேகமானவை முன்னைய அரசாங்கத்தின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன, என சுட்டிக்காட்டியுள்ள நியுஸ் 18 ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்வதையும்,இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வது குறித்து மோடி அரசாங்கம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என நியுஸ் 18 தெரிவித்துள்ளது.
இந்தியா புதிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் புதிய கடன்கள் குறி;த்தும் அறிவிக்கலாம் எனவும் இந்திய வெளிவிவகாரஅமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என நியுஸ் 18 குறிப்பிட்டுள்ளது.
இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்; இருந்து மீளஎழுந்து வரும் நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு குறித்த விடயங்களும் இரு தலைவர்களினதும் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறலாம் எனவும் நியுஸ் 18 தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவரா என கேள்வி எழுப்பியவேளை இதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை என நியுஸ் 18 தெரிவித்துள்ளது.

எனினும் இது பிரதமரை பொறுத்தவிடயம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் இந்திய இலங்கை உறவுகள் ஒரு விவகாரத்தை விட பெரியவை எனவும் தெரிவித்தன என நியுஸ் 18 தெரிவித்துள்ளது.
பிராந்திய விவகாரங்களும் பேச்சுவார்த்தைகளி;ல் இடம்பெறலாம் என நியுஸ்18 தெரிவித்துள்ளது.

