அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

373 0

மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் மாவீரர் தினம் எழுச்சியுடன் இடம்பெற்றது.

பண்டிவிருச்சான் பிரதான பாதையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு பொலிஸ், இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், மக்கள் பலரும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் , நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி மன்னார் மற்றும் நானாட்டன் நகர பிரதேச சபை உப தவிசாளர்கள் அருட்தந்தையர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.