வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள்

333 0

முல்லைத்தீவு, வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று மாலை 6.6 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கபட்டது.

மூன்று மாவீரர்களின் தாயாரான சுப்பிரமணியம் செல்வராணியால் பிரதான ஈகை சுடர் ஏற்றிவைக்கபட்டது. அதனைத் தொடர்ந்தது ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.

இம்முறையும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்ததுடன் அழுகுரல்களிற்கு மத்தியில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.