மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணி முதல் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


