அரச நிறுவனங்களின் பிரதானிகள், பணிப்பாளர் சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக விஷேட குழுவொன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. நால்வர் கொண்ட விஷேட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவின் கீழ், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சுசந்த ரத்நாயக்க மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் டயன் கோமஸ் ஆகியோரே இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
கடந்த வாரம், புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற போது, அனைத்து அரச நிறுவங்களுக்கும் ஊழல் மோசடிகளுடன் தொடர்பர்ற தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர் எனவும், அவர்களை தெரிவு செய்ய விசேட குழுவொன்று சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அமைச்சர்கள் தமக்கு நிறுவனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்குழுவுக்கு சிபாரிசு செய்ய முடியும் எனவும், அதிலிருந்து தகுதியானவரை குறித்த குழு முடிவு செய்யும் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
அதன் பிரகாரமே தற்போது அந்த விஷேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

