வாகன விபத்துகளை தடுப்பது தொடர்பில் செயலமர்வு ஆரம்பம்

326 0
வாகன விபத்துகளை தடுப்பது தொடர்பில் சாரதிகளை தெளிவூப்படுத்தும் செயலமர்வு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாவது செயலர்வு நேற்று (24) இடம்பெற்றது.

பாதுகாப்பான நாட்டை உருவாக்க வாகன விபத்துகளை தடுப்பது மிக முக்கியமானதாகும்.

இவ்வாறான செயலமர்வுகளை நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாடுமுழுதும் உள்ள சகல பொலிஸ் அதிகாரிகளையும், போக்குவத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகளுடன் இணைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் ஊடாக சகல முச்சக்ரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகளையும் தெளிவுபடுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வீதி ஒழுங்கு விதிகளை கடைப்பிடித்தல், வீதி நடைமுறைகளை சரியாக பேணல், கவனயீனத்தால் ஏற்படும் விபத்துகளை தடுத்தல், விசேடமாக பாதசாரிகள் வீதியை கடக்கும் போது பாதுகாப்பாக செயற்படுதல் ஆகியவை தொடர்பில் இந்த செயலமர்வில் விளக்கமளிக்கப்ட்டு வருகின்றது.