தென்னை பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

318 0
வென்னப்புவ, பொலவத்த பகுதியில் அமைந்துள்ள தென்னை பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்து நேற்று (24) இரவு 9.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் நீர்க்கொழும்பு நகர சபை தீயணைப்பு படையின் உதவியுடனும் வென்னப்புவ பிரதேச சபையின் உதவியுடனும் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீயினால் எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினால் சேதமடைந்த பொருட்கள் தொடர்பாக இதுவரை மதிப்பீடு செய்யவில்லை.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.