கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று நீர் வெட்டு!

270 0

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலயம் வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள நீர்க் குழாயின் சீரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, வத்தளை, மாபோல, வெலிசர, கெரவலப்பிட்டி, ராகம, பட்டுவத்த, புளுகஹகொட மற்றும் ஹொரபே ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.