ஹந்துன் திவியா எனப்படும் சிறுத்தைக் குட்டிகள் இரண்டு புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுத் திணக்கள அதிகாரிகளினால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.புத்தளம் 2ம் கட்டப் பகுதியில் இன்று காலை காடு துப்பரவு செய்துக்கொண்டிருந்த வேளையில் ஒருவர் ஹந்துன் திவியா எனப்படும் சிறுத்தைக் குட்டிகள் இரண்டு காணப்பட்டதை அவதானித்துள்ளார்.
இதன் போது புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று சிறுத்தைக் குட்டிகளை உயிருடன் மீட்டுள்ளனர்
.மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிகள் பிறந்து 20 நாட்கள் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுத்தைக் குட்டிகளை பிராணிகளை பராமரிக்கும் நிக்கவெரட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள உதவி அதிகாரி ஜே. லலித் தெரிவித்தார்.

