பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முல்லேரியா, அம்பதலே பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கிலோ 600 கிராம் கேளர கஞ்சா தொகை விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

