பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ!

431 0

சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவில் நடப்பு அரச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அந்த அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் பின்னர் பிரதமராக நியனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மத அனுஷ்டான நிகழ்வுகளுடன் அலரிமாளிகையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான  உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

அதன் விபரம் பின்வருமாறு :

மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி, புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும் பதவியேற்றார்.

1. நிமல் சிறிபால டிசில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்டசீர்திருதங்கள் அமைச்சர்.

2. ஆறுமுகன் தொண்டமான் – சமூகவலுவூட்டல் மற்றும் தோட்டவுட்கட்டமைப்பு  அபிவிருத்தி அமைச்சர்.

3. தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவு, திறன் அபிவிருத்தி தொழில்துறை உறவுகள் அபிவிருத்தி அமைச்சர்.

4. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் மற்றும் நீரியல் வளமூல அபிவிருத்தி அமைச்சர்.

5. பவித்திரா தேவி வன்னியாராச்சி – முதலில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சராகவும், இரண்டாவதாக சுகதாரதம் மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சராகவும் பதவியேற்றார்.

6. பந்துல குணவர்தன – முதலில் தகவல் தொடர்பாடல் அபிவிருத்தி அமைச்சராகவும், இரண்டாவதாக உயர் கல்வி தொழில்நுட்படம் மற்றும் புத்தாக்கம் அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.

7. ஜானக்க பண்டார தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சர்.

8. சமல் ராஜபக்ஷ – முதலில் மகாவளி, கமத்தொழில், நீர்ப்பாசன கிராமிய அலுல்கள் அபிவிருத்தி அமைச்சராகவும் இரண்டாவதாக உள்ளக வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அபிவிருத்தி அமைச்சர்.

9. டலஸ் அழகப்பெரும – முதலில் கல்வி அமைச்சராகவும், இரண்டாவதாக விளையாட்டுத்துளை மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமை்சசராகவும் பதவியேற்றார்.

10. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – முதலில் வீதி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சராகவும் இரண்டாவதாக துறைமுக மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றார்.

11. விமல் வீரவன்ச – முலில் சிறிய நடுத்தர தொழிற்துறை அமைச்சராகவும் இரண்டாவதாக கைத்தொழில் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.

12. மஹிந்த அமரவீர – முதலில் பயணிகள் போக்குவரத்து அமைச்சராகவும் இரண்டாவதாக மின்சக்தி மற்றும் மின்வலு அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.

13. எஸ்.எம். சந்திரசேன – முதலில் சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகவும் இரண்டாவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.

14. ரமேஸ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்.

15. பிரசன்ன ரணதுங்க – முதலில் கைத்தொழில் ஏற்றுமதி முதலிட்டு மேம்பாடு அமைச்சராகவும் இரண்டாவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராகவும் பதவியேற்றார்.