இடைக்­கால அர­சாங்­கத்தில் தேசிய பாது­காப்­புக்கும் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் முக்­கி­யத்­துவம்

284 0

எமது தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள இடைக்­கால  அர­சாங்­கத்தில் தேசிய பாது­காப்­புக்கும் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

மேலும் வடக்கு, கிழக்கு மக்கள் எமக்கு அதி­க­மாக வாக்­க­ளிக்­க­வில்லை. எனினும் அந்த மக்­களின் தேவை என்ன? அவர்­களின் பிரச்­சி­னைகள் என்ன? என்­பது தொடர்பில் ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக விசேட அவ­தானம் செலுத்­தப்­படும் என்றும் தினேஷ் குண­வர்த்­தன குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் மூன்று மாதங்­க­ளுக்­காக இடைக்­கால அர­சாங்கம் ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார்.

அவர் இது  தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­த­லில் நாட்டு மக்கள் அமோ­க­மாக கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர்.

தற்­போது புதிய ஜனா­தி­பதி தனது கட­மை­களை ஆரம்­பித்­துள்ளார். பத­வியில் உள்ள  அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மக்கள் ஆணை வழங்­கப்­பட்­டுள்­ளதால் புதிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­ட­வேண்டும்.

நாங்கள் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு செல்­லவே முயற்­சிக்­கின்றோம். ஆனால்  ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தேர்­த­லு­க்கு  செல்­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தாக தெரி­ய­வில்லை.

எனவே எதிர்­வரும்  மார்ச் மாதம் வரை  இடைக்­கால அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதில் அமைச்­ச­ரவை ஒன்றும் இருக்கும்.

இந்த இடைக்­கால அர­சாங்­கத்தில் நாட்டின் தேசிய பாது­காப்பு மற்றும்   பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பாக கவனம் செலுத்­தப்­படும்.  நல்­லாட்சி  அர­சாங்­கத்­தினால்  பொரு­ளா­தாரம் பலப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. பொரு­ளா­தாரம் பாரிய வீழ்ச்­சியை நோக்கி நகர்­கின்­றது.  எனவே பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும்.

இதே­வேளை இந்த ஜனா­தி­பதித்  தேர்­தலில் வடக்கு,  கிழக்கு மக்­களின் அமோக ஆத­ரவு எமக்கு கிடைக்­க­வில்லை. எனவே அந்த மக்­களின்  அடிப்படை  தேவை மற்றும் பிரச்சினைகள்  தொடர்பில் நாங்கள் ஆராயவேண்டியுள்ளது. இது தொடர்பில் எமது அரசாங்கம்  உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.  அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்றார்.