கிழக்கு மாகாண ஆளு­ந­ராக தமிழர் ஒரு­வரை நிய­மிக்­கவும் – இரா.துரை­ரெத்­தினம்

293 0

ஜனா­தி­பதி தேர்தலின் போது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­மாறு கோரியும், கிழக்கு ஆளு­ந­ராக தமிழர் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறும் முன்னாள் கிழக்கு மாகா­ண­சபை சிரேஷ்ட உறுப்­பி­னரும், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான இரா.துரை­ரெத்­தினம் ஜனா­தி­ப­திக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளார். கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்­களில் நாட்டில் தங்­களால் இனங்­கா­ணப்­பட்ட பல விட­யங்­க­ளான சிறு­பான்­மை­யி­னரின் தேவைகள், வெளிநாட்டு கொள்­கைகள், நிதிக் கொள்­கை­களை அமுல்­ப­டுத்­துதல், நாட்டின் பாது­காப்பு, ஊழல் ஒழிப்பு, இயற்கைச் சூழலைப் பாது­காத்தல், பட்­ட­தா­ரி­க­ளுக்­கான தொழில் வாய்ப்பு, மூவி­ன­மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துதல், தேசி­ய­கொள்கை வகுத்தல், கைதி­களின் விடு­தலை, காணி விடு­விப்பு, கல்­முனைப் பிர­தே­ச­செ­ய­லகம் தரம் உயர்த்­துதல், மலை­யக மக்­களின் 1000ரூபா சம்­பள அதி­க­ரிப்பு, கல்வி சீர்­தி­ருத்தம், விவ­சா­ய­ நீர்ப்­பா­சனக் கொள்கை, பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பான விட­யங்கள், யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான சுய­தொழில் வாய்ப்பு இது போன்ற இன்னும் பல விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­வ­தாக தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கி­ய­தோடு, தேர்தல் மேடை­க­ளிலும், பிர­சாரம் செய்­தீர்கள்.

மேற்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ள­வற்றின் அடிப்­ப­டையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பல விட­யங்­க­ளுக்கு மக்கள் முன் உத்­த­ர­வாதம் அளித்­தி­ருந்­தீர்கள். அந்த வகையில் சில விட­யங்கள் உள்­ள­டக்­கப்­படும். தற்­ச­மயம் பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளீர்கள். சிங்­கள மக்கள் அளித்த அதி­க­ப்ப­டி­யான வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் முழு நாட்­டி­னதும், முழு இனங்­க­ளி­னதும் ஜனா­தி­பதி நீங்கள்.அந்­த­வ­கையில் சிறப்­பான வெற்­றியை எட்­டி­யுள்­ளீர்கள். தமிழ்­மக்­க­ளுக்கு செய்யும் சேவை­யூ­டாக அம்­மக்­களின் விரக்­தி­யி­லி­ருந்து போக்­கு­வீர்கள் என்னும் நம்­பிக்கை எமக்கு உண்டு.

எனவே தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன் வைக்­கப்­பட்ட விட­யங்­களை அமுல்­ப­டுத்த வேண்டும். இம்­மா­வட்­ட­மா­னது மூவி­ன­ மக்­க­ளையும் உள்­ள­டக்­கிய மாவட்­ட­மாகும். இங்கு கடந்த காலத்தில் தெரிவு செய்­யப்­பட்ட அமைச்­சர்கள் நிதி ஒதுக்­கீட்டின் போது கட்சி சார்­பா­கவும், இனம் சார்­பா­கவும், தனிப்­பட்­ட­ ரீ­தி­யிலும், சமூ­க­நலன் இல்­லாமல் சில நிதி ஒதுக்­கீ­டுகள் நடை­பெற்­றுள்­ளன. இதன் தாக்­கத்தை தமிழ் மக்கள் அனு­ப­வித்­த­வர்கள் இங்கு சமூ­க­ந­ல­னோடு மூன்று இனங்­களும் பாதிக்­கப்­ப­டாமல் இருப்­ப­தற்கு உங்­களால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற செயற்­திட்­டங்கள் முன்­னு­தா­ர­ண­மாக அமைய வேண்டும்.

கிழக்கு மாகாணம் என்­பது தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழு­கின்ற மாகா­ண­மாகும். வடக்­கிற்கு தமிழர் ஒருவர் ஆளு­ந­ராக நிய­மனம் செய்­யப்­பட்­டதைப் போல் கிழக்கு மாகாணசபைக்கும் கட்சி நலன் பாராது, இனம்பாராது, மதம்பாராது ஊழல்மோசடியற்ற நல்லதொரு தமிழ் ஆளுநர் ஒருவரை நியமித்து தாங்கள் முன்னுதாரணமாக எல்லா இன மக்களுக்குமான ஜனாதிபதி என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். நல்ல செயற்திட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் மனங்களை இனியாவது வெல்வதற்கு வழிசமைப்பீர்கள் என நம்புகின்றோம்.