ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
டியூலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 49 வயதான சந்தேகநபரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று முன்தினம் இரவு நடமாடிய நபரை விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். சந்தேகமடைந்த பொலிஸார் குறித்த நபரைச் சோதனையிட்டபோது அவரிடமிருந்து நான்கு கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அத்துடன், மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளையும் சந்தேக நபரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

