ஹக்கீம், ரிஷாட்டிற்கு அமைச்சுப் பதவிகளை வழங்கப்போவதில்லை – தினேஷ் குணவர்தன

284 0

ரவூப் ஹக்கீமுக்கோ, ரிஷாட் பதியூதீனுக்கோ புதிய அரசாங்கத்தில் இடமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தில், ஹக்கீமுக்கோ, ரிஷாட் பதியூதீனுக்கோ வாய்ப்பளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இருவருக்கும், தமது அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.