முல்லைத்தீவில் வெடிமருந்துடன் ஒருவர் கைது

195 0

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் 53 கிலோகிராம் வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 53 கிலோ கோர்டைட் ரக குறைந்த சக்தியுடைய வெடிமருந்து மீட்கப்பட்டது.

சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.