ஜா-எல பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது

294 0

ஜா-எல- எவரியவத்த பகுதியில் பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்க்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது ஹெரோயின்  போதை பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த மூவரும் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதணை செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்களிடமிருந்து 6 கிராம் 180 மில்லிகராம் ஹெரோயின் போதைபொருள் மீட்க்கப்பட்டதுடன், அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 26 வயதுக்குற்ப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.