சர்வதேச சந்தையில் சீனியின் விலை குறைவடைந்திருப்பதனால், ஒரு கிலோ சீனியின் விலை 3.00 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. மேலும் பல நாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த விலை குறைவடைந்துள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நேர காலத்துடன் தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்துவதற்கு தமது சங்கம் தயாராகி வருவதாகவும் அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

