பீடி இலைகளுடன் நான்கு பேர் கைது

384 0

நீர்கொழும்பு கடலில் கடற்படை மற்றும் பொலிஸார்  இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1620 கிலோகிராம் பீடி இலைகளுடன் நான்கு பேரை கைது செய்துள்ளனர். 

அதன்படி, நீர்கொழும்பு கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கை மேற்கொண்ட போது சந்தேகத்திற்குரிய ஒரு டிங்கி படகை மேற்கு கடற்படை கட்டளை மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் கவனித்தனர்.

 

குறித்த படகை மேலும் ஆய்வு செய்யப்பட்ட போது 54 பொதிகளில் அடங்கிய பீடி இலைகளை காணப்பட்டன. அங்கு குறித்த படகு மற்றும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்கள் 32, 52, 58 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள துடன் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.