சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து ஒரு தொகை கொக்கெய்ன் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த கென்ய பிரஜையை போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக சுங்க அதிகாரி தெரிவித்தனர்.
35 வயதான கென்யாவைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.
400 கிராம் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 30 பொதிகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை கைதுசெய்த பின்னர் மேலும் ஏற்பட்ட சந்தேகத்தில் ஸ்கேன் செய்த போது கொக்கெய்ன் போதைப் பொருளை உருண்டைகளாக உருட்டி ஆண்ணுறையில் புகுத்தி அதனை அவர் விழுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணை நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

