யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு முழுஅளவில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிவரும் காலங்களில் துரதிஸ்தவசமான சம்பவங்களும் இடம்பெறாது என்றும் மாணவர்களுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.
பல்ககை;கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு தனிக் குழு அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கான ஆவனை செய்யப்படும் என்றும் ஜனாதிபதி பல்கலக்கழக சமூகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இக் கொலைக்கான நீதி வேண்டி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பல்கலைக்கழக சமூகத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து மாணவர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் கைவிடப்பட்டது. அத்துடன் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கான ஒழுங்கும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப் போச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் சார்பில் துணைவேந்தனர் வசந்திர அரசரட்ணம், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் சக மாணவர்கள் பலர் கொழும்பிற்குச் சென்றிருந்தனர்.
ஜனாதிபி செயலகத்திற்குச் சென்ற இவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இப் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் உடன் இருந்தார்.
இதன் போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது சூட்டுச் சம்பவம் நடாத்தப்பட்டிருந்த போதும், பொலிஸார் அச் சம்பவத்தினை மூடி மறைத்து, அச் சம்பவம் சாதாரண விபத்துச் சம்பவம் என்று சோடினை செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.
விபத்து என் ரீதியில் விசாரணைகளை முடித்து இரு மாணவர்களின் சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் முயட்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். ‘
இருப்பினும் இவர்களுடைய இறப்பு தொடர்பாக சந்தேகம் கொண்ட சக மாணவர்கள் வைத்திய சாலையில் நின்ற நடத்திய போராட்டத்தின் காரணமாகவே இரு மாணவர்களும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் உயிரிழந்தார்கள் என்பதை பொலிஸார் ஒப்புக் கொண்டிருந்தார்கள்.
மாணவர்கள் அன்று வாய்மூடி இருந்திருந்தால் இரு மாணவர்களுடைய உயிரிழப்பும் சாதாரண விபத்துச் சம்பவமாகவே முடிந்திருக்கும். பொலிஸாருடைய நடவடிக்கைகள் சந்தேகம் கொள்ள வைக்கின்றன.
குறிப்பாக உயிரிழந்த மாணவர்களின் ஒருவர் துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்தார் என்று வைத்திய சாiலியல் தெரிவிக்கப்பட்டது. அவருடன் சென்ற மற்றைய மாணவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படவில்லை.
எனவே இரு மாணவர்களும் உயிரிழந்தமை தொடர்பான உண்மையான தகவல்கள் எமக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். மேலும் பல்கலைக்கழக மாணவர்களுடைய பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மாணவர்களுடைய கோரிக்கை தொடர்பாக பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன:- யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் வித்தியா என்னும் மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவருடைய குடும்பத்தை நான் நேரில் சந்தித்து வித்தியாவின் இழப்பிற்கு ஆறுதல் தெரிவித்திருந்தேன்.
இதன் போது வித்தியாவின் குடும்பத்தினர் தமககு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதாக தெரிவித்து, தமது குடும்பத்திற்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதன்படி வித்தியாவின் குடும்பத்திற்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொண்டதுடன், அவர்களுடைய குடும்பத்தினர் வாழ்வதற்காக வவுனியாவில் வீடு ஒன்றினை அமைத்துக் கொடுத்துள்ளோம்.
இது போன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய பாதகாப்பும் முழு அளவில் உறுதிப்படுத்தப்படும். இனிவரும் காலங்கிளல் இவ்வாறான துரதிஸ்ரமான, கவலையான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் இரு மாணவர்களும் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்வதற்காக யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடாக அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைத்து குறித்த சம்பவம் தொடர்பாபில் ஆராய்வுகளை மேற்கொள்ளுங்கள். அதற்காக ஆவனைகளை அரசாங்கம் செய்து கொடுக்கும்.
ஜனாதிபதியினைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,:- குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் நடத்த விடாமல் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் நாங்கள் தான் பாரப்படுத்தியிருந்தோம். அவர்கள் இவ்விசாரணைகளை நீதியாக மேற்கொள்வாளர்கள் என்றார்.
- Home
- முக்கிய செய்திகள்
- யாழ்.பல்கலைக்ழக மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

