வெற்றிக் கொண்டாட்டத்துடன் பொதுத் தேர்தலுக்கு செல்வோம்- மஹிந்த

290 0

ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதே சிறந்ததென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டவில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அனைவரும் மக்களின் கருத்தை மதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் நாட்டில் அடுத்து நிகழ வேண்டிய முக்கியமான விடயமென்றால் அது நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதாகும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்களது பதவியை இராஜினாமா செய்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.