கரைத்துறைப்பற்றில் மலசலகூடங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்-பிரதேச செயலர்

353 0

%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 809 குடும்பங்களுக்கு புதிய மலசலகூட வசதிகளும் 77 சேதமடைந்;த மலசலகூடங்;களை புனரமைத்து கொடுக்கவேண்டிய தேவையுள்ளதாக கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்;டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் இதுவரை பதின்மூவாயிரத்து 213 வரையான குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

இந்நிலையில் மீள்குடியேறிய குடும்பங்களின் பல்வேறு வகையான தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளன எனவும் தெரிவித்;த கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலாளர் குணபாலன், இதுவரை 516 புதிய மலசல கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த 345 மலசலகூடங்களும் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 809 புதிய மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதுடன் சேதமடைந்த நிலையில் காணப்படும் 77 மலசலகூடங்களையும் புனரமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 170 புதிய கிணறுகளும் 25விவசாயக் கிணறுகளும் அமைத்துக் கொடுக்கப்படவேண்டியுள்ளதுடன் சேதமடைந்த 191 கிணறுகளையும் 4 விவசாயக்கிணறுகளையும் புனரமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்