சேலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க. என குறிப்பிட்டுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், “திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்” என்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டார். அதன்பின், விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானதுதான் மிசா விவாதமும்.

