ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.
இதன்படி இன்று காலை 10.00 மணிவரை காலியில் 25 சதவீத வாக்குப் பதிவுகளும், கண்டியில் 30 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் கம்பஹாவில் 30 சதவீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 30 சதவீத வாக்குகளும், நுவரெலியாவில் 40 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாத்தறையில் 30 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டையில் 25 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 25 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 44 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 25 சதவீத வாக்குகளும், மன்னாரில் 30 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

