ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், வவுனியாவில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், வவுனியாவில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களிற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இதேவேளை, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 2200 பேர் இந்த தேர்தலில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

