1000 நாட்களாக நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் கண்காட்சி/கவனயீர்ப்பு நிகழ்வுகள்

835 0

146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது? தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 1000 நாட்களாக நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் நடைபெறும் கண்காட்சி/கவனயீர்ப்பு நிகழ்வுகள். சிறீலங்கா அரசின் ஏமாற்று வார்த்தைகளும், செயற்றிட்டங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. ஆனால் போராடியேனும் அவர்தம் பிள்ளைகளைக் காணாமலாக்கப்பட்ட முகங்களை சர்வதேச அரங்கின் முன் கொண்டுவர சாட்சியங்களின் உயிர்வாழ்வு அவசியமானதாகும். இனப்படுகொலையின், மனித உரிமை மீறல்களின் சாட்சியமாக எஞ்சியிருக்கும் அந்தத் தாய்மாரைக் காப்பாற்றுவதற்கும் அவர்களுக்கான பரிகார நீதியை பெற்றிடவும் பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலுயுறுத்தும் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம் .

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி