பிரதேச சபை பெண் உறுப்பினர் மீது தாக்குதல்; ஐவர் கைது

305 0

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிமாலியத்த பிரதேச சபையின் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (10) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர்கள் இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுள் ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார என்பவரும் உள்ளடங்கியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.