ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர்.
இம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதைக்குற்படுத்தியதனாலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் பகிடிவதைப் பிரச்சினையிலிருந்து ஏனை பல்கலைக்கழகங்களை விட வித்தியாசமான நிலையிலிருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிடிவதைக்குற்பட்ட மாணவர்கள் 10 பேரும் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து ஏனைய புதிய மாணவர்களும் கல்வியை இடைநிறுத்தம் செய்துவிட்டு பல்கலைக்கழகத்தை விட்டு இடைவிலகத் தீர்மானித்துள்ளனர்.

