பிரஜாவுரிமையை துறந்தவரின் பெயர் பட்டியலில் எப்போது வெளியாகும்?

264 0

அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்தவரின் பெயர் பெடெரல் ரிஜிஸ்டர் ஆவணத்தில் வெளியாவதற்கு பல மாதங்களாகலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்த  கேள்விக்கு பதில் அளிக்கையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரக பேச்சாளர் இதனை  தெரிவித்துள்ளார்.

 

நபர் ஒருவர் தனது பிரஜாவுரிமையை துறந்த பல மாதங்களிற்கு பின்னரே அவரின் பெயர் பெடரல் ரிஜிஸ்டரில் வெளியாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சட்டங்கள் காரணமாக என்னால் தனிநபர் குறித்து கருத்துகூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.