கொழும்பு, கோட்டை முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள பி.எஸ்.டி. எனப்படும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் தங்கும் 4 மாடி கொண்ட கட்டடத்தின் கீழ் மாடியில் பரவிய தீ காரணமாக பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான முச்சக்கர வண்டியும், பொலிஸ் திணைக்களத்தின் 5 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 47 மோட்டார் சைக்கிள்களும் கருகி சாம்பலாகியுள்ளன.
நேற்றிரவு 10.00 மணியளவியில் பரவிய இந்த பரிய தீக்கான காரணம் இன்று மாலை வரை கண்டறியப்பட்டிராத நிலையில், குறித்த சம்பவம் நாசகார செயலா அல்லது விபத்தா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி குற்றப் புலனயவுப் பிரிவு இது தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.


