காட்டு யானை தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

35 0

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை – மங்களகம-கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 59 வயதுடைய நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் குறித்த நபர் வீட்டில் இருந்த நிலையிலலேயே யானையொன்று  வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளது.

இந்நிலையில் மற்றுமொரு பகுதியான கல்கிரயாகம-ஆடியாகல பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் யானையொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி 62 வயதுடைய நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.