இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்­தி­யாவில் புகையிரதத்துறையில் பயிற்சி

212 0

இலங்கை இரா­ணு­வத்­தினர் இந்­தி­யாவுக்கு சென்று ரயில்வே துறையில்  பயிற்­சி ­பெ­று­வ­தற்­கான அனு­ம­தியை பாது­காப்பு அமைச்சு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அத­ன­டிப்­ப­டையில் முதல் கட்­ட­மாக 30 பேர் பயிற்­சிக்­காக இந்­தியா செல்­ல­வுள்­ள­த­ாகவும்  போக்­கு­வ­ரத்து இரா­ஜாங்க அமைச்சர் அசோக் அபே­சிங்க தெரி­வித்தார்.

இது ­கு­றித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

இரா­ணு­வத்­தி­லி­ருந்து  இவ்­வாறு ரயில்வே துறை பயிற்­சிக்­காக இந்­தியா செல்­ல­வுள்ள 30 பேரில் 10 பேருக்கு ரயில் சாரதி பயிற்­சியும் 10 பேருக்கு சாரதி உத­வி­யாளர் பயிற்­சியும் எஞ்­சிய 10 பேருக்கு ரயில் தொழி­ல்நுட்பம் தொடர்­பான பயிற்­சியும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வி­த­மாக மூன்று கட்­டங்­களில் 90 பேர் ரயில்வே துறையில் பயிற்­சி­ பெ­ற­வுள்­ளனர். இவ்­வாறு இந்­தியா செல்­ல­வுள்ள  90 பேரால் பயிற்­சியின் பின்னர் ஐம்­பது ரயில்­களை இயக்க முடியும்.

தற்­போது நாளாந்தம் அரச, தனியார் ஊழி­யர்­க­ளுக்­காக 40 ரயில் சேவைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. ரயில்வே ஊழி­யர்கள் வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டா­லும்­கூட  இவர்­களால் ஐம்­பது ரயில்­களை இயக்க முடியும்.  எதிர்­கா­லத்தில் இந்­தியா, சீனா ஆகிய நாடு­க­ளுடன்  பேச்­சு­வார்த்­தை­களை  நடத்தி முப்­ப­டை­களைச் சேர்ந்­த­வர்­களை குறித்த நாடு­க­ளுக்கு அனுப்பி ரயில்வே துறையில் பயிற்­சி­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் என்றார்.