கோத்தாபயவின் கொள்கை பிரகடணத்தை புத்திஜீவிகள் தயாரித்திருக்க முடியாது – அகில

287 0

கோத்தாபய ராஜபக்ஷவின் கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் கல்வியின் தரம் குறைந்து கல்வித்துறை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

அத்துடன் வெட்டுப்புள்ளி முறைமை இல்லாதொழிக்க போவதாக கோத்தாபய ராஜபக்ச தனது கொள்கை பிரகடணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றப்போவதாகவும் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபய ஆட்சிக்கு வந்து மேற்குறிப்பிட்ட கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் கல்வியின் தரம் குறைந்து கல்வி துறை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்.

எனவே அவரின் கல்வி கொள்கை புத்திஜீவிகளால் தயாரிக்கப்பட்டதாக கூறமுடியாது. கல்வி துறையில் அறிவு படைத்தோர் இவரது கொள்கை பிரகடணத்தை தயாரித்து இருக்க முடியாது. இது மிகவும் பாரதூரமானது.

கல்வி துறையை கட்டியெழுப்பவும் தரத்தை அதிகரிக்கவும் நாம் பூரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிரணியை ஆட்சிக்கு கொண்டு வந்து மீண்டும் பழைய நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்வதா? அல்லது முன்னேற்றம் அடைவதா? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.