த. தே. கூ வில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர்

291 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர். இந்த நிலையில் தமது சுகபோக மற்றம் தன்னலம் சார்ந்தே ஜனாதிபதி வேட்பாளரிற்கு அதரவு வழங்கியுள்ளனர்

என வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்தார்.

நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்புாதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 22ம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தோம். குறித்த காலப்பகுதியில் எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சிதைத்து புதிய அமைப்புக்களை தமது சுயலாபத்திற்காக பயன்படுத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கு கருத்து தெரிவித்திருந்தேன்.

இதன்போது வவுனியாவை சேர்ந்த சிலர் தொடர்பில் கருத்து கூறவேண்டி ஏற்பட்டது. அதற்காக நாம் அவர்களை விலக்கியோ அல்லது அவர்களை குறை கூறும் வகையிலோ நாம் செயற்படவில்லை. அவர்களின் போராட்டமும் எமது போராட்டமும் ஒன்றே.

அனைவரும் ஒரே விடயத்தை முன்வைத்தே போராடிவருகின்றோம். அவர்களும் தமது பிள்ளைகளை தேடியே போராடுகின்றனர். எமது போராட்டத்தை தமது அரசியல் சுய இலாபங்களிற்காக பயன்படுத்துகின்றனர் என்பதையே அன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தோம்.